பரணியின் காலில் விழுந்ததற்கு காரணம் கூறும் ஜூலி
ஜுலி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு நடிகர் பரணியை சந்தித்து பொது இடத்திலேயே காலில் விழுந்தார். அந்த வீடியோ அப்போது வைரலானது.
இந்நிலையில் அது பற்றி இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜாவிடம் பேசிய ஜூலி, “அவரை நான் அண்ணன் என கூப்பிட்டேன், அதற்கு அவர் உண்மையாக தான் இருந்தார்.
அவர் வீட்டை விட்டு போனதே எனக்கு வருத்தமாக இருந்தது. அண்ணன் சுவர் தாண்டிய போதே எனக்கு மனசு உறுத்தியது, ஆனால் ‘என்னுடன் சேர்ந்தால் உன்னையும் ஒதுக்குவார்கள்’ என அவர் சொன்ன ஒரு வார்த்தையை ஏற்று தான் நான் அவரை அப்போது கூப்பிடவில்லை” என ஜூலி மேலும் தெரிவித்துள்ளார்