முக அழகை மெருகூட்டும் தேங்காயின் அற்புதமான குணங்கள்….!!!

Amazing properties of coconut

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய கவலையே முகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தான். இதனை போக்குவதற்கு பல ஆயிரங்கள் செலவு செய்து, சிகிச்சை மேற்கொண்டாலும், அதற்கு முழுமையான தேர்வு கிடைக்காமல், மாறாக பல பக்க விளைவுகளை தான் ஏற்படுகிறது.

நாம் செயற்கையான முறையை கையாளுவதை விட இயற்கையான முறையை கையாளும் போது அதில் முழுமையான தீர்வை காண முடியும். இப்பொதும் நாம் முக அழகை மெருகூட்டுவதில் தேங்காய் எண்ணெய் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்ப்போம்.

நமது அன்றாட அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய் எண்ணெய்.  இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்து கொள்ள உதவுகிறது.

செய்முறை :

தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உழந்ததும் தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.

இளநீர் வழுக்கை :

இளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூட அவை காணாமல் போய்விடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்