எந்த கட்சியுடனும் பாஜகவுக்கு கருத்து வேறுபாடு இல்லை- மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
தனிப்பட்ட முறையில் எந்த கட்சியுடனும் பாஜகவுக்கு கருத்து வேறுபாடு இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,தனிப்பட்ட முறையில் எந்த கட்சியுடனும் பாஜகவுக்கு கருத்து வேறுபாடு இல்லை.எங்களுடன் யார் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். நாட்டுக்கு எது நல்லதோ அதன்படி முடிவெடுப்போம்.
திமுகவிற்கு கொல்கத்தாவில் ஓட்டுவங்கி இருக்கிறதா? என்றும் திரிணாமுல் காங்கிரசுக்கு தமிழகத்தில் ஓட்டுவங்கி உள்ளதா என்றும் நாளை நடக்கவுள்ள பேரணி, துண்டு கட்சிகளின் பேரணியே மெகா கூட்டணியல்ல என்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.