உயிருக்கு உலை வைக்கும் உடற்பயிற்சி…!!!

dangerous exercise

50 வருடங்களுக்கு முன்பு பாரம்பரியக் கலையான சிலம்பு, குத்துசண்டை ஆகியவற்றை கற்று கொண்டு வாலிபர்கள் உடலமைப்பை பாதுகாத்து கொண்டனர். அதன் பின்பு கராத்தே, குங்ப்பூ போன்ற வீர சாகச பயிற்சிகள் வந்தன.  தற்போது ஜிம்மில் 5 முதல் 10 மணி நேரம் வரை செலவழித்து சிக்ஸ்பேக் உடலமைப்பை தக்கவைத்து கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அழகின் முகவரி சிக்ஸ்பேக்….!

சமீப காலமாக படங்களில் வரும் நடிகர்கள் சிக்ஸ்பேக் உடலமைப்பை கொண்டவர்களாக நடித்துள்ளனர். இதனையடுத்து இந்த சிக்ஸ்பாக் ஆசை இளைஞர்களிடம் தீயாக பரவி வருகிறது. அழகின் முகவரி எதுவென்று கேட்டால் சிக்ஸ்பேக் என்பார்கள். அந்த அளவிற்கு சிக்ஸ்பாக் மீது பைத்தியமாக உள்ளார்கள்.

உயிருக்கு உலை வைக்கும் உடற்பயிற்சி ஸ்டிராய்டு…!

இந்த சிக்ஸ்பேக் உடலமைப்பு பெறுவதற்காக ஸ்டிராய்டு என்கிற மருந்தை பயன்படுத்துகிறார்கள். இது உயிருக்கே ஆபத்தான மருந்து என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக உடலில் சேரும் கொழுப்பு உடல் இயக்கத்தின் மூலம் கரைந்து போகும். சில நேரங்களில் அந்த கொழுப்புகள் கரையாமல், ஆங்காங்கே வயிற்று பகுதிகளில் சேர்ந்து உருவாக்குவது தான் சிக்ஸ்பேக்.

நோய் என்னும் பள்ளத்தில் தள்ளும் உடற்பயிற்சி…!

இந்த ஸ்டிராய்டு மருந்து உட்கொள்வதால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகமும் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் முற்றிலும் செயலிழக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்