போட்டிக்கு போட்டியாக களத்தில் வந்து இறங்கும் புதுபுது ரக கார்கள்…!!! இந்திய சந்தையில் அந்த காரை வாங்கினால் உலககோப்பை கிரிக்கெட்டை நேரடியாக காணலாம்…!!!

Default Image

சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி.க்கான முன்புதிவுகள் ஏற்கனவே துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. நிசான் கிக்ஸ் காரை  முன்பதிவு செய்ய கட்டணமாக   ரூ.25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கூடிய விரைவில்  இந்தியாவில் அறிமுகமாக  இருக்கும் நிலையில், புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. இந்த மாத இறுதியில்  விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Image result for NISSAN KICKS SUV

மேலும் கிக்ஸ் எஸ்.யு.வி. கார் ஏற்கனவே விற்பனையகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர புதிய காரை முன்பதிவு செய்வோரில் 500 பேருக்கு சிறப்பு சலுகைகளும் பரிசுகளும்  அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி நிசான் நிறுவனம்  தேர்வு செய்யும் 500 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் இந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்வு முறை மற்றும் இதர விதிமுறைகள் நிசான் இந்திய நிறுவனத்தில்  அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Related image

இதனுடன் நிசான் டெரானோ, ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்டுர் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை நிசான் கிக்ஸ் கொண்டுள்ளது. உள்புறம் கேப்டுர் மாடலில் உள்ள அம்சங்கள் சிறப்பாகவே  வழங்கப்பட்டுள்ளது.இதில் ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360 டிகிரி கோண கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதிக்காக  காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வசதி  நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கார் கிடைக்கிறது.

Image result for NISSAN KICKS SUV

மேலும்  இது 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் இதில்  வழங்கப்படுகிறது.மேலும் இதில்  1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுக்கு இந்த ரக கார் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நிசான் கிக்ஸ் இந்திய விலை ஜனவரி 2019 வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் கார் பிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

DINASUVADU.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்