ஒக்கி புயல் உருவானது…,கடுமையான பாதிப்புகளை சந்திக்க இருக்கும் தென் மாவட்டங்கள்…!
கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் ஒக்கி புயல் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒக்கி புயலாக மாற்றியுள்ளது .65 முதல் 75 கி.மீ, வேகத்தில் வீசி வரும் காற்று 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளது.
மணிக்கு 38 மைல் வேகத்தில் ஒக்கி புயல் நகர்ந்து வருகிறது – வானிலை ஆய்வு மையம் ஒக்கி புயல் மேற்கு-வடமேற்கு திசையில் லட்சத் தீவுகளை நோக்கி நகர்கிறது அடுத்த 24 மணி நேரத்தில் ஒக்கி புயல் தீவிர புயலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது
மாவட்டங்களில் மிககனமழைக்கு வாய்ப்பு ஒக்கி புயலால் குமரி,நெல்லை,தூத்துக்குடி,விருதுநகர் மாவட்டங்களில் மிககனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனவே, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.