தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தற்கொலை மூடிமரைக்கும் கல்லூரி
துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடியை சேர்ந்த தங்கராஜ் பிரேமா தம்பதியினரின் மூன்றாவது மகள் அஜிதாபானு (19). இவர் வாகைக்குளம் ஹோலிகிராஸ் கல்லுாரியில் இசிஇ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழன்று அஜீதாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதாம்.
இதனால் ஊசி போட்டு விட்டு கல்லுாரிக்கு சென்றுள்ளார். மறுநாள் வெள்ளியன்று அஜீதா படிக்கும் கல்லுாரியிலிருந்து அவரது வீட்டிற்கு போன் செய்து உங்கள் மகளுக்கு காய்ச்சலால் அவதிப்படுகிறார். எனவே உடனே வந்து கூட்டி செல்லுங்கள் என கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் வந்து கூட்டி சென்றுள்ளனர். மறுநாள் சனிக்கிழமை தேர்வு நடந்துள்ளது. இதில் அஜிதா கலந்து கொள்ளவில்லை. இதனால் கல்லுாரியிலிருந்து அவரது தந்தைக்கு போனில் அழைத்து கல்லுாரி வராததற்கான காரணம் கேட்டபோது காய்ச்சல் காரணமாக கல்லுாரி வராதததை கூறியுள்ளார்.
பின்னர் கடந்த திங்கள்கிழமை அன்று கல்லுாரி சென்ற அஜிதாவை அவரது ஆசிரியர் அனைத்து மாணவ மாணவிகள் முன்னிலையிலும் வகுப்பின் பெஞ்ச்சின் மீது நிற்க வைத்துள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் மாணவியை திட்டியுள்ளார். இதனால் அழுது காெண்டிருந்த மாணவி திடீரென கீழே விழுந்துள்ளார். இதனால் அவரை துாக்க சென்ற மாணவ மாணவிகளையும் தடுத்துவிட்டார். கல்லுாரி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி தனது தாயாரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அவரும் மகளை சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர் அவரது தாயார் கடைக்கு சென்றிருந்த சமயம் வீட்டில் அஜீதா தற்கொலைசெய்து காெண்டுள்ளார். இதை போலத்தான் 2015 ம் ஆண்டு ஒருமாணவி ஆசிரியர் திட்டியதால் அந்த கல்லூரியின் மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிந்தது தொடர்ந்து இது போன்ற சர்ச்சையில் சிக்கிவரும் இந்த கல்லூரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி இந்திய மாணவர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.