ஒன்றியத்திலிருந்து விலகும் பிரிட்டன்…!!!! நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு…!!!!
பிரக்ஸிட் அமல்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது பற்றி முடிவு செய்யும் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றது.
இதில் பெரும்பாலானோர் பிரிட்டன் ஐரோப்பிய யூனியிலிருந்து பிரிய ஆதரவு தெரிவித்தனர். பிரிட்டனின் இந்த வெளியேற்ற முடிவுதான் பிரக்ஸிட் எனக் குறிப்பிடப்படுகிறது.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பிரிட்டன் வெளியேற்றத்துக்கான கெடு முடிய இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில் தெரசா மே அரசுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பிரிட்டன் பிரதமர் தெரசா மேக்கு கடும் சவாலாக விளங்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
DINASUVADU.