கோடநாடு காரணகர்த்தாவே முதல்வர்..!குற்றம்சாட்டிய குற்றம் சாட்டபட்டவர்கள்..!எல்லையை மீறியது தமிழக காவல்..!!தீவிரவாதிகளா என்ன..? கொந்தளிக்கும் மேத்யூ..!!
கோடநாடு கொலை-கொள்ளை விவகாரத்திற்கு காரணகர்த்தாவே முதல்வர் தான் என்று குற்றம்சாட்டிய இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டபட்டவர்களான சயன் மற்றும் மனோஜ் இருவரும் இந்த தகவலை தெரிவித்தனர்.இந்நிலையில் இவர்களை கைது செய்ததில் எதமிழக காவல்துறை எல்லையை மீறியுள்ளது ம்மேலும் இவர்கள் இருவரும் தீவிரவாதிகளா என்று..? கொந்தளிக்கிறார் தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் சாமுல் மேத்யூ.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சாமுல் மேத்யூ சட்டவிரோதமாக சயனையும், மனோஜையும் தமிழக போலீசார் பிடித்து சென்றுள்ளனர்.இவர்கள் உடனடியாக தேடி கைது செய்யும் அளவிற்கு சயனும், மனோஜும் தீவிரவாதிகள் இல்லை என்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு மத்தியில் மேத்யூ பேட்டி அளித்தார்.
மேலும் பேசிய அவர் உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக காவல் வரம்பு மீறி செயல்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய மேத்யூ முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.