சொந்த ஊரில் பொங்கல் விழா கொண்டாடிய முதல்வர்…!!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் விழாவை தனது சொந்த ஊரில் கொண்டாடியுள்ளார்.
தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு சென்ற அவர் தனது குலதெய்வமான பாலமுருகன் கோவிலில் குடும்பத்தினருடன் சென்று வழிபாடு நடத்திய பின்னர் கோமாதா பூஜையிலும் பங்கேற்றதுடன் பொதுமக்களுக்கு பொங்கலை வழங்கி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.அதன் பின்னர் நடைபெற்ற ஒயிலாட்டம், மயிலாட்டம் மற்றும் சிறுவர், சிறுமிகளின் சிலம்பு போட்டிகளையும் பார்த்து ரசித்தார்.