கோடநாடு கொலை-கொள்ளை குற்றச்சாட்டுகள்..!ஆளுநரிடன் ஸ்டாலின் மனு..!!
தமிழக அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்து மறைந்தவர் முதல்வர் ஜெயலலிதா இவர் மறைவிற்கு பிறகு ஓய்வு எடுப்பதற்காக நீலகிரியில் உள்ள அவருடைய கோடநாடு பங்களாவிற்கு செல்வது வழக்கம் அப்படி தனது ஓய்வு நேரத்தை எல்லாம் அங்கு தான் செலவிட்டார் ஜெயலலிதா.
இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பிறகு 2017 பிப்..,24 தேதி கோடநாடு கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.அதுமட்டுமல்லாமல் சூறையாடப்பட்டும்,கொலையும் அரங்கேறி நிலையில் இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட முன்னாள் பத்திரிக்கையாளர் என அனைவரும் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கோடநாடு கொள்ளை மற்றும் கொலைக்கு முதல்வர் தான் காரணம் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.மேலும் கொள்ளை தொடர்பாக ஒரு காணொலியும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கோடநாடு காணொலி குறித்தும் முதல்வர் பழனிசாமி மீதான குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க நேர்மையான ஐஜி தலைமையிலான விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். அவருடன் கனிமொழி, அ.ராசா, டி.ஆர். பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.