தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்கடலோர தமிழக பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும், நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 2 இரவுகள் உறைபனி நிலவும் என்றும், தென்கடலோர தமிழக பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.