எனது கிரிக்கெட் வெற்றிக்கு என் ஆசான் தான் காரணம்: ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் தேர்வான தமிழக வீரர் உருக்கம்!!
ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சர்ச்சை கருத்துக்கள் சிக்கி தற்போது பிசிசிஐயின் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக ஆட வந்த இருவரும் மீண்டும் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு மாற்றாக தமிழக வீரர் விஜய் சங்கர் மற்றும் 19 வயதான சுப்மன் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதன்படி அதற்கு மாற்றாக தேர்வான விஜய் சங்கர் தனது கிரிக்கெட் வெற்றிக்கு இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ஆசான் ராகுல் டிராவிட் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது…
இந்தியாவின் ஏ அணியில் ஆடிய போது என்னுடைய கிரிக்கெட் ஆட்டம் மெருகேற்றப்பட்டது. அதற்கு ராகுல் டிராவிட் பெரும் உதவியாக இருந்தார். அந்த அணிக்காக ஆடும் போது எனக்கான சூழ்நிலைகளை நானே தேர்வு செய்து ஆடினேன். அப்போது என்னை மெருகேற்ற ராகுல் டிராவிட் மிகவும் உதவினார் என்று கூறியுள்ளார் தமிழக வீரர் விஜய்சங்கர்.