யாகம் நடத்தியது சட்டப்படி குற்றம்….கீ.வீரமணி கருத்து..!!
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் யாகம் நடத்தியதாக எதிர்க்கட்சித்தலைவர் முக.ஸ்டாலின் , விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கீ.வீரமணி தெரிவிக்கையில் அரசு என்பது மதச்சார்பற்றது என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.தலைமைச்செயலகத்தில் துணை முதல்வர் யாகம் நடத்தியது அரசியலமைப்பு சட்டத்தின் படி குற்றம் என்று கீ. வீரன்மணி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.