விஜயகாந்த் விருப்பப்பட்டால் தேமுதிகவுடன் கூட்டணி சேர தயார்-அதிரடியில் இறங்கிய சரத்குமார்
விஜயகாந்த் விருப்பப்பட்டால், தேமுதிகவுடன் கூட்டணி சேர தயார் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறுகையில்,நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை.அதேபோல் விஜயகாந்த் விருப்பப்பட்டால், தேமுதிகவுடன் கூட்டணி சேர தயார்.
கோடநாடு விவகாரத்தில் முதல்வர் தன் மீது குற்றமல்ல என தெரிவித்து உள்ளார். கோடநாடு விவகார வழக்கை விசாரிக்க தனிப்பட்ட கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். நான் சட்டமன்றத்தை நோக்கி தான் பயணித்து வருகிறேன். கட்சி தொண்டர்கள் விரும்பினால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயார் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.