கொடநாடு கொலை, கொள்ளை வீடியோ விவகாரம்: டெல்லி விரைந்தது 2 தனிப்படை
- கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்
- தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் வெளியிட்ட ஆவணப் படம்
- இந்த விவகாரத்தில் மேத்யூஸ் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
செய்தியாளர் மேத்யூஸ் மற்றும் சயனை கைது செய்ய எஸ்.பி.செந்தில்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் டெல்லி விரைந்துள்ளது.
தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக தான் நடத்திய புலனாய்வு குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் கொடநாடு கொலை, கொள்ளையில் நடந்தது என்ன என்பது குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் விளக்கம் அளித்து உள்ளார். மேலும், அதில் கொடநாடு எஸ்டேட்டில் தொடர்ச்சியாக நடந்த கொலை சம்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் காரணம் என்று தெரிவித்தார்.
பின் கொடநாடு வீடியோ விவகாரத்தில் மேத்யூஸ் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் செய்தியாளர் மேத்யூசை கைது செய்ய எஸ்.பி.செந்தில்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் டெல்லி விரைந்துள்ளது.கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் சயான், ரவி ஆகியோரை பிடிக்கவும் கேரளா விரைந்தது தனிப்படை.