பிரபல நடிகர் படம் இரண்டாவது இடத்திற்கு 27 வருடங்களுக்கு பின்பு வந்துள்ளது !!1ஏன் தெரியுமா
ரஜினியின் பேட்டயும் ,அஜித் விஸ்வாசமும் ஒரே நாளில் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனைகளை உள்ளூரிலும் ,வெளிநாட்டிலும் செய்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் ரசிகர்கள் இந்த பொங்கலை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் தமிழ் நாட்டில் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளது. ரஜினியின் பேட்ட இரண்டாம் இடத்தில் உள்ளது.
1992ஆம் ஆண்டு அக்டோபர் 25 ல் ரஜினியின் பாண்டியன் படமும், கமல்ஹாசனின் தேவர் மகன் படமும் திரைக்கு ஒரே நாளில் வந்தது. அப்போது கமல்ஹாசனின் ‘ தேவர்மகன்’ படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் ரஜினியின் ‘ பாண்டியன் ‘ படம் இரண்டாம் இடத்தில் இருந்திருக்கிறது. எனவே இந்த நிலைமை மீண்டும் ரஜினிக்கு 27 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.