அப்பாவாகிய சீமான்…அவருடைய மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது…!!
சீமான் கடந்த கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 5 அண்டுகள் ஆனபின் சீமான் மற்றும் கயல்விழி தம்பதியருக்கு சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதையடுத்து , பிறந்த தன்னுடைய குழந்தையை சீமான் கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.