விருதுநகர் , தேனி , சிவகங்கை , பெரம்பலூர் , மைலாடுதுறை நிர்வாகிகளிடம் பேசும் பிரதமர்…!!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் அனைத்து கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி வியூகங்கள் நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே பாரதீய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமித்து தேர்தல் பணியை செய்து வருகின்றனர்.குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து பகுதி கட்சி பொறுப்பாளர்களிடமும் “எனதுவாக்குச்சாவடி வலுவானவாக்குச்சாவடி” என்ற நிகழ்ச்சி மூலம் காணொளியில் பேசி வருகின்றார்.அதன் ஒரு பகுதியாக சில நாட்களாக தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகின்றார்.இந்நிலையில் வருகின்ற 13/01/2019 ஆம் தேதி விருதுநகர் , தேனி , சிவகங்கை , பெரம்பலூர் மற்றும் மைலாடுதுறை பொறுப்பாளர்களிடம் கலந்துரையாடுகின்றார்.