மதுரையில் 500 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை…..!!!
மதுரை காமராஜர்புரம் பகுதியில் 500 சவரன் நகை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் பணம், நகை கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்காக காவல்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் இச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் மதுரை காமராஜர்புரத்தில் உள்ள தங்கவேலு என்பவரது வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிகப்பட்டுள்ளது.
மேலும் இவரது வீட்டில் 500 சவரன் நகை மற்றும் ரூ.8 லட்சம் பணத்தையும் மர்ம நபர்களை கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.