முதல் ஒருநாள் போட்டி:இந்திய அணி வெற்றிபெற 289 ரன்கள் நிர்ணயம் செய்தது ஆஸ்திரேலியா
முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய ரன்கள் அடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.
மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.இந்த வெற்றியை விராட் கோலி தலைமையிலான இந்திய படைகள் பிசிசிஐயின் 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்ததுள்ளது.மேலும் உற்சாகத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டது.
இதன் பின் இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (ஜனவரி 12-ம் தேதி) தொடங்கியது.
இன்று தொடங்கிய முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக பீட்டர் 73,கவாஜா 59,மார்ஷ் 54 ரன்கள் அடித்தனர்.களத்தில் மேக்ஸ்வெல் 11* ,மார்கஸ் 47* ரன்களுடன் இருந்தனர்.
இந்தியா அணியின் பந்துவீச்சில் குல்தீப்,புவனேஸ்வர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.