பெற்றோர்களுக்கு ஓர் இனிய செய்தி…! வரும் 21-ம் தேதி முதல் LKG, UKG வகுப்புகள் துவக்கம்…..!!!
அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளை வரும் 21-ம் தேதி முதல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் துவக்கி வைக்கிறார்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், 4 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அங்கன்வாடிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வரும் 21-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் மாநில மகளிர் பள்ளியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கி வைக்க உள்ளார்.