ரூ.2 லட்சம் கோடி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது…அருண் ஜெட்லி விளக்கம்…!!
அருண்ஜெட்லி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு எந்த வரியையும் உயர்த்தாமல் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார். குறிப்பாக மறைமுக வரி , ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் 1 லட்சம் கோடி அளவுக்கு பொருட்களின் விலை குறைந்துள்ளது என்று தெரிவித்த அருண் ஜெட்லி. இதனால் ஆண்டுக்கு 97 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக கூறியுள்ளார்.