அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி…!!! மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம்…!!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று துவங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17ம் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று துவங்கியுள்ளது.
மாடுபிடி வீரர்கள் உடல் தகுதியுடன், அவர்களது வயது 18 முதல் 40 வரை இருக்க வேண்டும். மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்ய 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.