70 வயது வேடத்தில் நடிக்க வில்லை !!20 வயது வேடத்தில்தான் நடிக்கிறேன் !!!பிரபல நடிகை !!
சமந்தா இவர் தமிழில் பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார். இவரின் தெலுங்குத்திரைப்படமான ‘ஏ மாயா சேசாவேயே ‘ முதலில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் , நடிகை சமந்தாவும் காதலித்து வந்தனர். அதன் பிறகு இவர்களின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.
இவர் தற்போது ‘ ஓ பேபி எந்தா சக்க குன்னவே ‘ தெலுங்கு படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படம் மிஸ் கிரான்னி என்ற கொரியன் படத்தின் ரிமேக் ஆகும். இந்த படத்தில் சமந்தா 20 வயது, 70 வயதில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். பின்பு இவர் தற்போது 20 வயதில் மட்டுமே முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் 70 வயதில் நடிக்க லட்சுமி என்னும் வயதான நடிகை நடிக்க தேர்வாகியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.