அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு அமைப்பு..உயர்நீதிமன்றம் உத்தரவு….!!
மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டி விழாக் கமிட்டியில் சில பிரிவினரே முடிவெடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் , ஜல்லிக்கட்டு போட்டியை நீதிபதி தலைமையில் நடத்தும் ஆணையர் குழுவை அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதில் ஆணையரே ஜல்லிக்கட்டு விழா குழு தலைவரை தேர்ந்தெடுப்பார் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்து இருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற கிளை.இந்த குழுவில் 16 கிராமங்களை கொண்ட ஆலோசனை குழுவை நியமித்து அந்த குழு இந்த ஒரு வருடத்திற்கு மட்டுமே என்றும் நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.