உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு மறுக்கிறது…! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு மறுக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், திருச்சி மணப்பாறை அருகே சீகம்பட்டியில் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தொடக்க புள்ளிதான் இந்த ஊராட்சி சபை கூட்டம்.உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு மறுக்கிறது.உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதால் தான் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.