பூசணி தயிர் பச்சடி செய்வது எப்படி தெரியுமா….?
பூசணிக்காயில் நாம் பலவகையான கொளம்பு வகைகள் மற்றும் கூட்டு வகைகள் செய்து சாப்பிட்டதுண்டு. ஆனால் பூசணி தயிர் பச்சடி செய்வது எப்படி என்று தெரியுமா? இப்பொது பூசணி தயிர் பச்சடி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- வண பூசணி – ஒரு கீற்று
- தயிர் – 1 கப்
- கடுகு – கால் டீஸ்பூன்
- உளுந்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
- சீரகம் – கால் டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 3
- கறிவேப்பில்லை – ஒரு கொத்து
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
பூசணிக்காயை துருவி நீரை வடித்து கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ( தாளித்து ), பூசணி துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பின் பச்சை மிளகாய், சீரகம் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, உப்பு சேர்த்து தயிருடன் கலக்க வேண்டும். பின் வதக்கிய பூசணியை, தயிர் கலவையுடன் கலந்து பரிமாற வேண்டும்.