கடலில் பேனர் வைத்த தல ரசிகர்கள் !!!!!!

தல அஜித்தின் ‘ விஸ்வாசம் ‘ படம் நாளைக்கு திரைக்கு பிரம்மாண்டமாய் வர உள்ளது.தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் பேட்ட ,விஸ்வாசம் பேனர்களை  ரசிகர்கள் போட்டி போட்டு வைத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள்  உற்சாகத்துடன் பேனர் ,போஸ்டர் வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலையில்  ரசிகர்கள் தல அஜித்திற்கு   வத்தலகுண்டு என்னும் ஊரில் 190 ft உயரத்தில் கட் டவுட் வைத்துள்ளார். இது தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அஜித்திற்கு தான் இவ்வளவு  உயரமான கட் டவுட்டை ரசிகர்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தல ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று நடுக்கடலிலும்  பேனர் வைத்துள்ளனர். இந்தியா -இலங்கை கடலோர எல்லை பகுதியில் வைத்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Leave a Comment