பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தந்தால் ஊழலும் அநீதியும்தான் வரும் …!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தந்தால் ஊழலும் அநீதியும்தான் வரும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், பொருளாதார ரீதியிலான 10% இட ஒதுக்கீட்டின் மூலம், ஊழல் ஏற்படவும், சமூக நீதி மறுக்கப்படவும் வாய்ப்புள்ளது.பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தந்தால் ஊழலும் அநீதியும்தான் வரும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு ஆகும்.சமூக நீதிக்காகதான் இடஒதுக்கீடு வேண்டும். திசை திருப்புவதற்காகவே பொருளாதாரஅளவில் இட ஒதுக்கீடு10% இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையிலும் எதிர்ப்போம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.