மதத்தை காட்டி பெண் உரிமையை பறிப்பது முறையானது இல்லை.!!
சபரிமலை விவகாரத்தில் மதத்தை காட்டி பெண் உரிமையை பறிப்பது முறையானது இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கலவரம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்