விஸ்வாசம் படத்திற்கு தடை இல்லை..நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!
தல அஜித் நடித்த ‘விஸ்வாசம் ‘ இந்த படத்தை வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பதால் ரசிகர்கள் தல அஜித்தை பொங்கலுக்கு திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பல பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பைனான்சியர் உமாபதி கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் படத்தை திரையிட கூடாது என்று வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிற்கு தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ் பதில் அளித்தது.பைனான்சியர் உமாபதி ரூ.78 லட்சத்தை கடனாக தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார்.அதில் ரூ.35 லட்சத்தை இன்றே வழங்குவதாகவும், 4 நாட்களில் மீதி தொகையை வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதியம் தொடர்ந்த போது சமரசம் ஏற்பட்டத்தால் விஸ்வாசம் படத்தை தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.