கனா வெற்றி விழா சுவாரஸ்யங்கள்!! வெற்றியின் ஒரு பங்கு இவர்ளுக்குதான்!!
நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலில் தயாரித்த திரைப்படம் கனா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் என பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். இப்படம் பல படங்களோடு பலமான போட்டியுடன் களமிறங்கினாலும் நல்ல வெற்றியை பதிவு செய்து இன்னும் நன்றாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் வெற்றிவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பலரும் சுவாரஸ்யமாக பேசி விழாவை கலகலப்பாக்கினர். அதில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், ‘நான் எப்போதும் நடிகன் சிவா தான்.எனவும் இதில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, மேலும் , இப்படம் வெற்றி படம் எனவும் இதில் கிடைத்த லாபத்தில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார்’
அடுத்து நடிகர் சத்யராஜ், ‘ தனது பழைய வெற்றிவிழா நினைவுகளை கலகலப்பாக பகிர்ந்துகொண்டார். மேலும், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிவிட்டு தனக்கு கண்ணில் அடிக்கடி நீர் வரும் ஆதலால் அதனை அவ்வபோது துடைத்து கொள்வேன் ஆனால் ஐஸ்வார்யா பேசும் போது தான் அழுதுவிட்டேன் என யு-டியூப் சேன்ல்கள் டிஆர்பிக்காக சத்யராஜ் அழுதுவிட்டார் என போட்டுவிடுவார்கள் என கலகலப்பாக யூடியூபை சேனல்களை கலாய்த்தார்.’
அடுத்து ஐஸ்வர்யா ராஜேஸ் , வழக்கம் போல படக்குழுவினர்க்கு நன்றி கூறிவிட்டு, இப்போதெல்லாம், ஓடாத படங்களுக்கெல்லாம் வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள் ஆனால் கனா வெற்றிபடம் என குறிப்பிட்டார்.
DINASUVADU