கோதுமை அல்வா எப்படி செய்வது என்று தெரியுமா…?
கோதுமை நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரக்கூடியது. இதில் நமது உடலில் உள்ள நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றலும் அதிகமாக உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
கோதுமையில் பலவகையான, நமக்கு விருப்பமான உணவுகளை செய்து சாப்பிடலாம். இப்போது சுவையான கோதுமை அல்வா செய்வது எப்படி என்று பாப்போம்.
தேவையான பொருட்கள் :
- கோதுமை மாவு – கால் கிலோ
- சர்க்கரை – 300 கிராம்
- கேசரி பவுடர் – கால் டீஸ்பூன்
- நெய் – தேவைக்கேற்ப
- ஏலக்காய் – 3 (பொடியாக்கியது )
செய்முறை :
வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவை சேர்த்து கட்டி இல்லாதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
அதன் பிறகு மாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் நெய் ஊற்றி, ஏலக்காய் போடி, கேசரி பவுடர் தூவி கிளறி, இறக்கி விட வேண்டும்.
இப்போது நமக்கு தேவையான சூடான, சுவையான கோதுமை அல்வா ரெடி.