” விஸ்வாசம் , பேட்ட ” படங்களை இணையத்தில் வெளியிட தடை….!!
விஸ்வாசம் , பேட்ட படங்களை இணையத்தளத்தில் வெளியிட தடை என்று உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
சமீபகாலமாக இணையதளத்தில் திரைப்படம் வெளியாகி திரைப்பட குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்து வருகின்றது தமிழ் ராக்கர்ஸ் . குறிப்பாக தமிழ் ராக்கர்ஸ் வெளியாகிய திரைப்படங்களை உடனே இணையத்தில் வெளியிட்டு வந்தன.இந்நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் விஸ்வாசம் , பேட்ட படத்தை இணையத்தில் வெளியீட தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட்து.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் விஸ்வாசம் மற்றும் பேட்ட படத்தை இணையத்தில் வெளியீட கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஏற்கனவே மெர்சல் படத்தை இணையத்தில் வெளியிட கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் படம் இணையத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.