காஞ்சிபுரம் அருகே கடத்தப்பட்ட குழந்தை மும்பையில் மீட்பு …!
பவுஞ்சூரில் கடத்தப்பட்ட நரிக்குறவரின் 2 வயது குழந்தை மும்பையில் மீட்கப்பட்டது.
நரிக்குறவர் தம்பதியின் குழந்தை ஹரினி 3 மாதங்களுக்கு முன் மாயமானார். மாயமான குழந்தை மும்பையில் இருப்பதாக தகவல் வெளியானது.இதன் பின் தனிப்படை போலீசார் மும்பை சென்ற நிலையில் குழந்தை ஹரினி மீட்கப்பட்டார்.
மும்பை ஜோகிந்தர் ரயில்நிலையத்தில் பார்த்ததாக லதா ரஜினிகாந்த் கூறிய நிலையில் குழந்தை மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.