இனிமேல் வாகனங்கள் ஓட்டுபவர்கள் மெதுவாக செல்லுங்கள்….!!! உங்கள் வேகத்தை கட்டுப்படுத்த வந்துவிட்டது ரோடார்கன் கருவி….!!!
அதிவேகமாக சாலையில் செல்லும் வாகனங்களை கண்டறியும் வகையில், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரோடார்கன் என்ற என்ற நவீன கருவி தமிழக அரசின் வட்டார போக்குவரத்து துறை மூலம் கும்பகோணத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரோடார்கன் கருவி :
அதிவேகமாக சாலையில் செல்லும் வாகனங்களை கண்டறியும் வகையில், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரோடார்கன் என்ற என்ற நவீன கருவி தமிழக அரசின் வட்டார போக்குவரத்து துறை மூலம் கும்பகோணத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவி உள்ள லேசர் ஒளியினை சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களில் செலுத்தினால், அந்த வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதனை காண்பித்து விடும்.
இந்த கருவி மூலம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் செல்லும் வாகனத்தின் வேக அளவை கூட கணிக்க முடியும் என அதிகாரிகரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கருவியின் விலை ரூ.6 லட்சம் எனவும் கூறியுள்ளனர்.