3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி…!உடனே அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் …! ஸ்டாலின்
பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பொறுப்பில் இருந்து காலதாமதமின்றி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1998ல் பேருந்துகள் மீது கல்வீசியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.குற்றம்சாட்டப்பட்ட 108பேரில் 16பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார் பாலகிருஷ்ண ரெட்டி. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் பதவி இழக்க நேரிடும். மேல்முறையீட்டில் தண்டனை உறுதியானால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது விதி ஆகும்.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பொறுப்பில் இருந்து காலதாமதமின்றி டிஸ்மிஸ் செய்ய வேண்டும். நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்ட நிலையில் உயர்கல்வி செயலாளரை பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும். உயர்கல்வித்துறை செயலாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.