சந்தோசம் ,துக்கம் என எல்லா நேரங்களிலும் ராஜாவின் இசை தான்-நடிகர் விஷால் !
தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அதனை பிரமாண்டமாக கொண்டாட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடுகள் செய்து வருகின்றது.
பிப்ரவரி 2மற்றும் 3ம் தேதிகளில் “இளையராஜா 75” என்ற நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.இந்நிகழ்ச்சியின் தொடக்கவிழா மற்றும் டிக்கெட் விற்பனை நேற்று சென்னை மகேந்திரா சிட்டியில் நடைபெற்றது.
இதில் நடிகர் விஷால்,கலந்து கொண்டு பேசினார். இளையராஜாவின் இசை என் வாழ்வோடு கலந்து இருக்கின்றது.சந்தோசம் துக்கம் என் எல்லா நேரங்களிலும் ராஜாவின் இசை தான் கேட்பேன் என்றார்.தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்டபோது கூட காரில் இளையராஜாவின் இசையை தான் கேட்டுக்கொண்டு வந்தேன் என்று பேசினார்.
மேலும் தான் இசையமைத்த பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டியில் குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கு தர இருப்பதாகவும் நடிகர் விஷால் கூறினார்.