ஆர்.கே நகரில் அதிமுக சார்பில் போட்டியிட மதுசூதனன் விருப்பமனு
ஆர்.கே.நகர் இடைதேர்தல் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளரை அறிவித்து அவர்களும் மனுதாக்கல் செய்து வருகின்றனர். சில கட்சியினர் பெரிய கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை நாளை முதல்வர் அறிவிப்பதாக நேற்று நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கூறியிருந்தார். அதன் படி உறுப்பினர்களிடம் இருந்து விருப்பமனுக்கள் வர ஆரம்பித்துவிட்டன. இதில் ஏற்கனவே ஓபிஎஸ் அணி சார்பில் ஆர்கே நகரில் போட்டியிட்ட மதுசூதனன் தற்போது விருப்பமனுவை அளித்துள்ளார்.