பெற்றோர்களே மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் பிரபல இயக்குனர் !!!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் 42-வது புத்தக கண்காட்சியை கடந்த 4 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.மேலும் இந்த கண்காட்சி இந்த மாதம் 20 ந் தேதி வரை நடை பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெற்றோர்களுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.இதில் அவர் கூறியதாவது
‘பெற்றோர்களே குழந்தைகளிடத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குங்கள்’.சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 42-வது புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.’பெற்றோர்களே.. குழந்தைகளை அழைத்து செல்லுங்கள்.அற்புதமான புத்தகங்கள் கிடைக்கின்றன ‘என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இந்த கண்காட்சி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த மாதம் முழுவதும் நடை பெற இருக்கிறது.இந்த புத்தக கண்காட்சியில் 820 அரங்குகள் உள்ளது.இதில் 1.5 கோடி புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.