ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் பதிவு செய்யப்பட்ட சங்கமா…? அதிமுக M.P.,M.L.A_க்கள் கேள்வி…!!
ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகம் எழுந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது.இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் சம்மந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.இவரின் இந்த கருத்துக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்ததையடுத்து தமிழக சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.அப்போது பேசியவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் பதிவு செய்யப்பட்ட சங்கமா..? என்று கேள்வி எழுப்பினார்கள்.