போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கிராமப்புறங்களில் பொதுமக்கள் எளிதில் ஓட்டுநர் உரிமம் பெற முகாம்கள் அமைக்கப்பட்டு 300 மேற்பட்டோருக்கு ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் முத்துசுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.