” நெருக்கடியில் நீதித்துறை என அறிவிப்போம் ” உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!
பணி ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கென்று தனி அலுவலகம் ஒதுக்கத்து குறித்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு சரியாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி அடைந்த்துள்ளது.அதில் நீதிமன்றம் சிலைகடத்தல் தடுப்பு தொடர்பாக சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்ககவேலை நியமித்து 50 நாட்கள் ஆகியும் தனி அலுவலகம் அமைத்துக்கொடுக்காதது ஏன்..?
ஓய்வு பெற்ற டிஜிபி உத்தரவு பிறப்பிக்கின்றார் என்று நினைக்கின்றீர்களா..? பனி நீடிப்பு செய்துள்ளதால் அப்படி நினைக்க கூடாது நீதித்துறையில் நெருக்கடி நிலை என்று பிறப்பிக்க நேரிடும் என்று தமிழக அரசை எச்சரித்துள்ளது.