நாடு தழுவிய போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது….தமிழக அரசு எச்சரிக்கை…!!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய முழுவதும் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அரசு ஊழியர்களை எச்சரித்துள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று தெரிவித்துள்ளார். மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிகை விடுத்துள்ளார்.