சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவு…
கேரளாவில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவத்தின் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சபரிமலையில் கபிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வன்முறையாக வெடித்தது.இந்த வன்முறையில் பாஜக தொண்டர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.பல இடங்களில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டு பதற்றம் ஏற்பட்டு வருகின்றது.மகரவிளக்கு பூஜை நடைபெற்று வரும் இந்த சூழலில் இந்து அமைப்புகள் போராட்டம் காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது…!!