ரூ.67 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டை கடந்த முயன்றவர் கைது…!!
67 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை கடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி அருகே செம்மரங்கள் கடத்தப்படுவதாக சித்தூர் எஸ்.பி. அலுவலகத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஏ.எஸ்.பி. கிருஷ்ணார்ஜூன ராவ் தலைமையில் தனிப்படை போலீசார் மாப்பாக்சி கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக வந்த கார் நிற்காமல் சென்ற போது காரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தியதில் செம்மரக்கட்டைகளை அவர்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.