அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்ப்போம்…தமிழக முதல்வர் உறுதி..!!
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது என்று, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் , அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். அணைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை வேறு மாநிலத்தில் இருந்தால் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் கட்டுப்படுத்தும் என்று சுட்டிக் காட்டிய முதலமைச்சர், முல்லைபெரியாறு உள்ளிட்ட அணைகளின் மீதான தமிழகத்தின் உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.அணை பாதுகாப்பு மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்துவோம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.