லாலு பிரசாத்திற்கு ஏதாவது நேர்ந்தால் பிரதமர் மோடியின் தோலை உரித்துவிடுவோம்
ராஜ்டிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைத்தனர். அப்போது லாலு பிரசாத் யாதவின் மகன் துணை முதல்வராக இருந்தார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடல் இரண்டு கட்சிகளும் பிரிந்தது. அதன் பின் ராஜ்டிய ஜனதா தளம் கட்சி பா.ஜா.க உடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது.
தற்போது பீகாரில் லாலு பிரசாத்துக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு, இசட் பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் லாலு பிரசாத் கொலை செய்ய படுவதர்க்காக சதி நடைபெறுகிறது என்று குற்றம்சாட்டினார். லாலு பிரசாத்துக்கு தீங்கு நேர்ந்தால் தாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை என்றும், பிரதமர் மோடியின் தோலை உரித்துவிடுவோம் என்றும் தேஜ் பிரதாப் கூறினார். பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடிக்கு தேஜ் பிரதாப் மிரட்டல் விடுத்ததாக அண்மையில் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.