அமெரிக்கா , வட கொரியா அதிபர்கள் சந்திப்பு…!!
அதிபர்கள் டிரம்ப், கிம் ஜாங் அன் இடையேயான பிப்ரவரி மாத இறுதியில் சந்திப்பு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது .
வட கொரியா நாட்டில் நடைபெறும் அணு ஆயுத சோதனையால் அந்நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் , வட கொரியா_வுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. இந்நிலையில் அதிபர்கள் டிரம்ப், கிம் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நடைபெற்றது. அந்த சந்திப்பில் அணு ஆயுத சோதனை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது .
இதையடுத்து வடகொரியா நாட்டின் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ளாததால், அதிருப்தியடைந்த வட கொரியா கிம் அணு ஆயுத கொள்கைக்கு மீண்டும் திரும்ப உள்ளதாக அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் மீண்டும் டோனால்டு டிரம்ப், கிம் ஜாங் அன் சந்தித்து பிப்ரவரி மாதம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.